இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை தேர்வுசெய்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இவர் ஐ.பி.எல் தொடரில் 2018-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடும் இவர் உலகெங்கிலும் நடைபெறும் டி10 மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவர் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அந்த நேர்காணலில் இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை தேர்வுசெய்துள்ளார்.
5-வது வீரர் :
இதில் ஐந்தாவது இடத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்றவரும், 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தவருமான யுவராஜ் சிங்கை தேர்வு செய்துள்ளார்.
4-வது வீரர் :
இதில் நான்காவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான விரேந்தர் சேவாக்கை தேர்வு செய்துள்ளார்.
3-வது வீரர் :
இதன் மூன்றாவது இடத்தில் பல சாதனைகளை படைத்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார்.
2-வது வீரர் :
இதில் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினின் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் கிங் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
முதல் வீரர் :
இந்தியாவுக்காக ஒரு நாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தேர்வு செய்துள்ளார்.