பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில், தாம்பரம் – தூத்துக்குடி – தாம்பரம் இடையே, முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, தாம்பரம் – தூத்துக்குடி – தாம்பரம் இடையே, முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, தாம்பரம் – தூத்துக்குடி இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில் (வண்டி எண் – 06001), வரும் 14 மற்றும் 16-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 07.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
மறுமார்க்கமாக, தூத்துக்குடி – தாம்பரம் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில் (வண்டி எண் – 06002) வரும் 15 மற்றும் 17-ஆம் தேதிகளில், காலை 06.00 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த சிறப்பு இரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று தூத்துக்குடியைச் சென்றடையும்.