உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் வரும் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது வருகிறது. மேலும், அயோத்தி கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
கும்பாபிஷேக விழாவுக்கு, சுமார் 7,000 விருந்தினர்களுக்கும், 3,000 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது
இதனிடையே, திருக்கோவில் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, அயோத்தி ராமர் கோவிலில் தங்க முலாம் பூசிய கதவு நிறுவப்பட்டுகிறது.
கருவறையின் மேல் தளத்தில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் தங்க கதவு நிறுவப்பட உள்ளது. நிறுவப்பட உள்ள 46 கதவுகளில் 42 கதவுகள் தங்க முலாம் பூசப்பட்டது. இதில், 42 கதவுகளும் 100 கிலோ தங்க முலாம் பூசப்பட்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு அல்லது மூன்று தினங்களில் தங்க முலாம் பூசிய கதவுகள் நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.