பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைகின்றனர்! - மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு
Sep 6, 2025, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைகின்றனர்! – மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு

Web Desk by Web Desk
Jan 11, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் இன்று (10.01.2024) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார்.

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுமார் ரூ.69 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் கடன் உதவி திட்டங்களை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியின் போது வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தபால் துறை, இந்தியன் ஆயில் நிறுவனம், சுகாதாரத்துறை மற்றும் சுய உதவிக் குழுக்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம், இதுவரை மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெறாத மக்கள் அவற்றில் பயன்பெற இணைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு,

மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் மாநில அரசுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஜல் சக்தி திட்டம் 73 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சில மாநிலங்களில் 50 முதல் 60 சதவீதம் வரை இத்திட்டம் நிறைவடைந்திருப்பதாக  அவர் கூறினார். 2026 ஆம் ஆண்டில் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இத்திட்டத்தை முழுவமையாக நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், இவற்றின் மூலம் அனைத்துத் தரப்பினரும் பயனடைவதாகக் கூறினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் பயனளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டா இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பழங்குடியினர் பெற முடியும் என்பதால், மாநில அரசுகள் இதற்கு ஏற்ப உறுதுணையாக செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக மத்திய அரசு, திறன் இந்தியா திட்டம், ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுவதாக இணையமைச்சர் கூறினார்.

பின்னர்,  வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண விழிப்புணர்வு வாகனத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர்,  மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய நாட்காட்டியை பொதுமக்களுக்கு  வழங்கினார்.

Tags: pmmodikovaiCentral ministers
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியை செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா சந்தித்தார்!

Next Post

செந்தில் பாலாஜி சகோதரர் கட்டிடத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies