இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 643 ஆக உள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 422 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 409 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 732 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 83 ஆயிரத்து 502 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.