கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில், 39.1 சதவீத பாதிப்பு, கர்நாடகாவில் மட்டும் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கர்நாடகாவில் புதிதாக 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 974 ஆக உள்ளது. மேலும், 257 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 849 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 138 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.
கேரளாவில் புதிதாக 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 613 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 195 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 162 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.