இந்துக்களுக்கான இடுகாட்டை திமுக அரசு புறக்கணித்து வருவதாக இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு சிறுபான்மையினரின் துதி பாடி அவர்களுக்கு மட்டுமான அரசாக அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே நாட்டம் உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மதபோதகர்ளுடனும் தனியாக ஆலோசனை நடத்தி சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
1. மாநில அரசால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் இனி நிரந்தரமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
2. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை பதிவு செய்வதிலும் மானியம் பெறுவதிலும் நடைமுறைகள் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
3. ஐந்தாண்டுக்கு ஒருமுறை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தற்போது தமிழக அரசின் இந்த அறிவிப்பால் இனி புதுப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு. அனால், ஒரு இந்து கல்வி நிறுவனம் பள்ளிக்கூடமோ, கல்லூரியோ தொடங்கினால் எத்தனை விதமான இடர்பாடுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எவ்வளவோ அரசாங்க நடைமுறைகளை பின்பற்றி தான் பள்ளிகள் உருவாக்கப்படும். ஆனால் சிறுபான்மையினர் என்றால் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது தமிழக அரசு.
4. கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்கள் மற்றும் முஸ்லிம்களின் கபரஸ்தான் போன்றவற்றை விரிவுபடுத்துவதற்காக மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளால் கட்டித் தரப்படும் என்று உறுதி.
5. கல்லறைகளில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் இன்னொரு உடலை புதைத்துக் கொள்ள விதிகள் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
6. இதில் சிறப்பாக, ஆழமாக ஆலோசித்து புதைக்கப்பட்ட சவப்பெட்டியில் 12 மாதங்களுக்கு பிறகு அதே குடும்பத்தை சேர்ந்தவர்களை புதைத்துக் கொள்ளலாம், உலோகத்தால் செய்யப்பட்டிருந்தால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களை புதைத்துக் கொள்ளலாம் என்று கிறிஸ்தவர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்.
7) கோவில், தேவாலயம், மசூதி போன்ற இடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற உறுதிமொழி கூறியுள்ளார். இத்தனை அறிவிப்புகளை வழங்கிய முதல்வர் கண்துடைப்புக்காகத் தான் கோவில் நிலம் மீட்பு என்று கூறியுள்ளதாக மக்கள் எண்ணுகின்றனர்.
மதசார்பற்ற அரசியல் செய்வவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வர் இந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னை மற்றும் பிற முக்கிய மாவட்டங்களில் இந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி. புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை.
இந்துக்கள் உயிரோடு இருந்தாலும் உரிமைகள் மறுக்கப்படுகிறது. இறந்த பின்பும் கூட அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்துக்களின் கோவில்களை போன்று இந்துக்களின் சுடுகாடுகளும் அரசாங்கத்தின் பிடியில் சிக்கி சீரழிகிறது, கட்டண கொள்ளை நடக்கிறது.
சென்னை,கோவை, திருப்பூர், சேலம் உட்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள இந்து சுடுகாட்டு இடத்தில் இடித்து நவீன கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன.
அதேபோல ஒரு இந்து உடலை புதைத்தால் பல்வேறு விதமான ஆவணங்களை வழங்கியும் கூட இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டி இருக்கின்றது. இப்படி பெரும்பான்மை இந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள் என்பது முதல்வருக்குத் தெரியாதா?
முஸ்லிம் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்களுக்கும் கபர்ஸ்தானங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்பது இந்துக்களின் கேள்வியாக உள்ளது.
எத்தனையோ இடங்களில் மசூதி,சர்ச் போன்று கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. அங்கு பிணத்தை புதைப்பதற்கு கட்டணம் வசூலிக்க்கப்படுகிறது. அதில் வரும் வருமானத்தையும் அவர்களே பயன்படுத்துகின்றனர். இவ்வாறிருக்க அரசு பணத்தை அங்கு கொண்டு கொட்டுவது ஏன்?
மசூதி சர்ச் நிலங்களை ஆக்கிரமித்ததாக முதல்வர் கூறுவது அபத்தம். பல மாவட்டங்களில் இந்து சுடுகாடுகளையும் இந்து கோவில்களையும் கபரஸ்தானும், கல்லறைத் தோட்டங…