அயலான் படத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியது!
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயலான் படத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியது!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர் நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் ‘எம்.எஸ் சேலஞ்ச்’ என்ற திரைப்பட விளம்பர நிறுவனத்திற்கும் தொழில்ரீதியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தன.

அதன்படி, கே.ஆர்.ஜே தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றியதற்கு விளம்பர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய் தொகையை தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை.

பின்னர், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் வெளியான நேரத்தில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு கோடி ரூபாயை அயலான் படம் வெளியாவதற்கு முன்னர் வழங்குவதாக கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதி அளித்தது.

ஆனால், பணத்தை திரும்ப கொடுக்காமல் படத்தை நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியானதையடுத்து, எம்.எஸ்.சேலஞ்ச் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இன்று பிற்பகலுக்குள் மனுதாரருக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அவ்வாறு பணம் திரும்ப செலுத்தாவிட்டால் அயலான் திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து எம்.எஸ்.சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் ரூ.50 லட்சத்தை திரும்ப செலுத்தியது. மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஏப்ரல் 10ம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

பின்னர், இந்த உத்தரவாதத்தை நீதிபதியிடம் தாக்கல் செய்ததையடுத்து அயலான் திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நாளை படம் வெளியாவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

Tags: AYALAN FILMACTOR SIVAKARTHIKEYAN
ShareTweetSendShare
Previous Post

ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி : வைரலாகும் புகைப்படம்!

Next Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : இந்தியா பந்துவீச்சு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies