இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது 11ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணி வீரர்கள் :
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் :
ஹஸ்ரத்துல்லா ஜசாய், குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, குல்படின் நைப் அல்லது கரிம் ஜனத், முஜீப் ரகுமான், கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.