நாட்டிற்காகவும், எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுவாமி விவேகானந்தர் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ்,
ஆங்கிலேயர் ஆட்சியில் இருண்டு கிடந்த பாரதத்திற்குக், கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்த வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று. இன்றைய தினம், நாடு முழுவதும் தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

“உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே… pic.twitter.com/KfzqTXVbAW
— K.Annamalai (@annamalai_k) January 12, 2024
“உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன” போன்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் இன்றளவும் நமது இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.
நாட்டிற்காகவும், எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்து, மக்களுக்கு ஆன்மீக ஒளியூட்டியவர். உலக அரங்கில் நமது கலாச்சாரத்தின் பெருமையைக் கொண்டு சென்றவர்.
இளைஞர்களின் முன் மாதிரியாக, பக்தி மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கும், மதிப்பிற்குரிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்தநாளில் அவரது புகழ் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.