மொஹாலியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது .
மொஹாலியில் நேற்று இரவு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சிவம் துபே ஆட்டமிழக்காமல் 60 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 31 ரன்களும் எடுத்தனர். முன்னதாக, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது.
முகமது நபி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகேஷ் குமார், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
சிவம் துபே ஆட்டமிழக்காமல் 60 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 31 ரன்களும் எடுத்து 17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி வரும் ஞாயிறு அன்று இந்தூரில் நடைபெறுகிறது.