உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள்! - அண்ணாமலை
Jul 24, 2025, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jan 12, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மாநிலத்தின் ஆட்சி துவங்கி, மேயர் வரை ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தைக் கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்திய வானிலை ஆய்வு மையம், மழை மற்றும் கனமழைக்கான முன்னறிவிப்புகளை வழங்குகிறது. மஞ்சள் எச்சரிக்கை எப்படி சிவப்பு எச்சரிக்கையாக மாறுகிறது என்பதை இங்கிருப்பவர்களுக்கு படிக்கத் தெரியவில்லை. அடிப்படை விஷயத்தை படிக்கத் தெரியவில்லை. அதை விவரிக்கத் தெரியவில்லை. ஒரு கமாண்டன்ட் ஜெனரல் ஏதாவது ஓர் அறிவிப்புக் கொடுத்தால், அதைக் கேட்டு கிரகித்து கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கான திறமை இல்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு 4 விஷயங்களைக் கூறினால், அதைக் கேட்டு கிரகித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் திறமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனவே, குடும்ப ஆட்சி என்பது தமிழகத்தை மொத்தமாக சீரழித்துள்ளது.

சிஸ்டம் முழுவதும் கெட்டுப்போய் உள்ளது. மாநிலத்தின் ஆட்சி துவங்கி, மேயர் வரை ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தைக் கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்.

இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது.இந்த லோக்சபா தேர்தல் சென்னை நகரை மாற்றக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க அமைச்சரவையில் உள்ள 75 பேர் மக்கள் பணி ஆற்றக்கூடியவர்கள். ஆனால் ஸ்டாலினின் அமைச்சரவையில் வேலை செய்யக்கூடிய தகுதியும், திறமையும் அற்றவர்களே உள்ளனர். அமைச்சரவையில் வேலை செய்யக்கூடிய தகுதியும், திறமையும் அற்றவர்களே உள்ளனர். குடும்ப ஆட்சியில் ஒருவரை அறிவாளியாக காட்ட வேண்டும் என்றால், அவரின் அருகில் கோமாளிகளை உட்கார வைக்க வேண்டும். அதுவே தமிழக அமைச்சரவை.

தென் தமிழகத்தில் கனமழை பெய்தபோது, திருநெல்வேலி மேயர் எங்கிருந்தார் என்று தெரியுமா? சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். திருநெல்வேலியில் மழை பெய்தது.

ஆனால், மேயர் அங்கு இல்லை. சரி, மழை வந்துவிட்டது. பாதிப்புகளை பார்வையிட யார் செல்ல வேண்டும்? உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் துரைமுருகனும் செல்ல வேண்டும். ஆனால், அங்கு சென்று யார் பார்த்தது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
காரணம், முதல்வரைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்.

சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த பின்னரோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ, எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கு. அதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம்.

ஃபார்முலா கார் பந்தயம், செஸ் ஒலிம்பியாட், ஏடிபி டென்னிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். கோட் சூட் அணிந்தபடி இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் வரவேண்டும். உதயநிதி ஸ்டாலின் அறிவாளி ஆகிவிட்டார் என்பது போல தமிழக மக்களுக்கு காட்டுகிறார்கள். எப்படி தமிழ் சினிமாவில் ஹீரோவை அறிமுகப்படுத்துவார்களோ அதுபோல, உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது.

முதல்வரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. அவரது கவனம் அனைத்தும் உதயநிதியை துணை முதல்வராக கொண்டுவந்து முதல்வராக்குவதில்தான் இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை மிக எளிதாக முடிவுகளை எடுக்க முடியவில்லை.

அறிவாலயத்தில் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து, அதை தொண்டர்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லி, தொண்டர்கள் அதை மூன்று நிமிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். இப்படித்தான் அறிவாலயத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காரணம், இங்கு ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது.

ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அவ்வாறு இல்லை. சின்னச் சின்ன பிரச்சினைகளின் ஊடே ஜனநாயகத்தை வளர்த்து கட்சியை வளர்ப்பதுதான் பாஜகவின் அழகே.

உலகிலேயே உண்மையான பரிபூரணமான தலையில் தொடங்கி கால் வரை முழுமையாக ஒரு ஜனநாயகம் இருக்கும் கட்சி பாஜகதான். அதனால், கட்சியிலும் இயற்கையாகவே பிரச்சினைகளும் அதிகமாகத்தான் இருக்கும். அண்ணாமலையால் கட்டளையிட முடியாது. அண்ணாமலையும் இந்தக் கட்சியில் ஒரு தொண்டன், ஒரு சேவகன்” என்று தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது: ரிசர்வ் வங்கி கவர்னர்!

Next Post

வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்ற கிஃப்ட் சிட்டிக்கு முக்கியப் பங்கு: நிர்மலா சீதாராமன்!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

Load More

அண்மைச் செய்திகள்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies