மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் மாநாடு, மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய அண்ணாமலை,
பாஜக 400 தொகுதிகளை வென்று பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அமர வேண்டும். மத்திய சென்னையில் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் 2024-ல் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பாரென்று.
சென்னை மக்களுக்கான சென்னையை உருவாக்க வேண்டும். கலைஞரின் குடும்பத்தை அரசியலில் வளர்க்க வேண்டும் என்றால், தமிழகத்தில் 14 குடும்பங்களை வளர வைக்க வேண்டும்.
தகுதி இல்லாத அரசியல்வாதிகளை விட கூடாது. ஒவ்வொரு வீடாக ஏறிசென்று பிரசாரம் செய்ய வேண்டும்.
லஞ்சம், குடும்பம், ஜாதி, அடாவடி இந்த நான்கு காலில் தான் திமுக உள்ளது. கதவை திறந்து வைத்துள்ளோம், யாரெல்லாம் நரேந்திர மோடியை 2024-ல் மீண்டும் வெற்றி பெறசெய்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கணும் என்று நினைப்பவர்கள் வரலாம்.
தயாநிதிமாறன் எம்.பியை தோற்கடிக்க வைக்க வேண்டும். சென்னை வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில் தயாநிதிமாறன் இண்டி கூட்டணியை சேர்ந்தவர்களுக்கு சால்வை போட சென்றுவிட்டார்.
மத்திய சென்னை, தென்சென்னை தொகுதியில் ஜெயிக்க வைக்கவேண்டும் என்றால், ஓட்டு போடாதவர்களை ஓட்டு போட வைக்க வேண்டும். ஓட்டு போட வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இராமேஸ்வரத்தில் யாத்திரையை ஆரம்பித்து 150-வது தொகுதி ஓசூரை தொட்டாச்சு. ஓசூரில் வரலாறு காணாத வகையில் கூட்டம் காணப்பட்டது.
தமிழகத்தில் 25 தொகுதியை தாண்டி பாஜக வெற்றி பெறும். தமிழகத்தின் அரசியல் சரித்திரத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேர்தல் எனத் தெரிவித்தார்.