மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கோவை அடுத்துள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு கோவை மாட்டுமல்லாது, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிடட் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மருதமலை முருகன் கோவிலின் அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருவதாக பக்தர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இதனால், பக்தர்கள் அச்சத்துடனே சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது, இரவு 7 மணி அளவில், தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது மூன்றாவது வளைவில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது கண்டு, டிரைவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், காரை சற்று தூரத்தில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டார்.
அங்கிருந்த சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்துவிட்டது. இதையடுத்து காரில் இருந்தவர் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் கண்டறிந்தனர்.
மருதமலை முருகன் கோவில் பகுதியில் தற்போது சிறுத்தை நடமாட்டம் மீண்டும் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.