பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, இணையதளத்தில் அனைவரும் முன்பதிவு செய்து கொள் வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் அன்பார்ந்த தமிழ்ச் சொந்தகளுக்கு, நமது பாரதத்தின் கலாச்சாரத் தூதுவர்களான உங்கள் அனைவரையும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 13 அன்று, அபுதாபியில், ஷேக் சையது விளையாட்டு நகரத்தில் சந்திக்கவிருக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் அன்பார்ந்த தமிழ்ச் சொந்தகளுக்கு, நமது பாரதத்தின் கலாச்சாரத் தூதுவர்களான உங்கள் அனைவரையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், வரும் பிப்ரவரி 13 அன்று, அபுதாபியில், ஷேக் சையது விளையாட்டு நகரத்தில் சந்திக்கவிருக்கிறார்.… pic.twitter.com/zg2ZF3SdoH
— K.Annamalai (@annamalai_k) January 12, 2024
கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமரின் தொலை நோக்குப் பார்வை மூலம் பல்வேறு துறைகளில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்தும் உங்களுடன் உரையாடவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், அரபு எமிரேட் நாட்டில் வசிக்கும் நமது தமிழ் மக்கள் அனைவரும் பெரும் திரளெனப் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நமது பிரதமர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, http://ahlanmodi.ae என்ற இணையதளத்தில் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.