பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? - வானதி சீனிவாசன் கேள்வி?
Mar 15, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? – வானதி சீனிவாசன் கேள்வி?

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை. விவசாயத்திற்கு அடிப்படையான சூரியன், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக, பொங்கல் வைக்கத் தேவையான பச்சரிசி, சர்க்கரை, பொங்கலுக்கு அத்தியாவசியமான கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தது 2,000 ரூபாயாவது வழங்கப்படும் என ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று மட்டுமே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்தை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாயும் நிறுத்தப்பட்டிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே, உடனடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன், வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp vanathi srinivasan
ShareTweetSendShare
Previous Post

என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! – ஜெனரல் அனில் சவுகான்

Next Post

மலை உச்சியில் இருவர் : யார் இவர்கள்? வேற்று கிரகவாசிகளா?

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies