சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.46 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 46 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.46 ஆயிரத்து 760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, ரூ. 5 ஆயிரத்து 845-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ரூ.6 ஆயிரத்து 376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 காசுகள் அதிகரித்து, ரூ.78 -க்கும், ஒரு கிலோ 78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.