இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 238 ஆக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 238 ஆக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 571 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 84 ஆயிரத்து 733 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று 407 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 82 ஆயிரத்து 853 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.