பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை வழங்கினார்.
உக்ரைனில் உள்ள கெய்வ் நகருக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுகே-உக்ரைன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் வழங்கினார்.
ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், இங்கிலாந்து விரைவான, நிலையான உதவியை வழங்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சுனக் கூறினார்.
தலைநகர் கீவ் சென்ற சுனக், அங்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைனிய வீரர்களை சந்தித்து உரையாடினார்.