கச்சா எண்ணெய் விலை உயர்வு!
Mar 15, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சா எண்ணெய் விலை உயர்வு!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டு கொள்ளாமல், செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.

இதை அடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தினர். இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டன.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்புடைய இடங்களை குறிவைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் நடத்திய தாக்குதலில், 5 பேர் உயிரிழந்ததாக ஹவுதி அமைப்பு கூறியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், பல்வேறு கப்பல் நிறுவனங்கள் தங்கள் கப்பலின் வழித்தடத்தை மாற்றியுள்ளன.

இந்நிலையில், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதேபோல், பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 79.36 டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Crude oil pricepetrol price
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்!

Next Post

ஜனவரி 22 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை! 

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies