இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாட மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி 11 ஆம் தேதி மொகாலியிலும், 2வது போட்டி வரும் 14 ஆம் தேதி இந்தூரிலும், 3வது போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரோகித் மற்றும் விராட் கோலி டி20 தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற்றனர்.
ஆனால் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணத்தால் அணியில் இருந்து விலகியதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இரண்டாவது போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தூர் மைதானத்திற்கு பயணித்தது.
நேற்று காலையில் இந்தூர் மைதானத்திற்கு இந்திய அணி வந்தடைந்த சூழலில், விராட் கோலி நேற்றிரவு மாலை மும்பையில் இருந்து இந்தூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தூரில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட நிலையில், அவர்களுடன் விராட் கோலியும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் திரும்பியுள்ளார்.
கடைசியாக 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.