நாளை ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம்!
Aug 25, 2025, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கான்பூர் விமானப்படை தளத்தில் 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை நடக்கிறது.

1947 ஆம் ஆண்டு போரில் படைகளை வெற்றிக்கு வழிநடத்திய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா 1953 ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் இது நினைவுகூரப்படுகிறது.

கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் முன்னாள் படைவீரர்கள் பேரணியுடன் கூடிய 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து, போரில் உயிர் நீத்தவர்களின் உன்னதமான தியாகம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் மரியாதை செலுத்துகிறார்.

இந்த ஆண்டு, ஸ்ரீநகர், பதான்கோட், தில்லி, கான்பூர், ஆல்வார், ஜோத்பூர், கவுகாத்தி, மும்பை, செகந்திராபாத் மற்றும் கொச்சி ஆகிய நாடு முழுவதும் 10 இடங்களில் முப்படைகளும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றன.

செகந்திராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் தலைமை தாங்குகிறார். புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் படைவீரர் தினம் கொண்டாடப்படும் நிகழ்வுகளை  அதிகரிப்பதன் ஒரு பகுதியாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் இந்த நாளைக் கொண்டாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது, முன்னாள் படைவீரர்களுக்கு பதக்கம், நினைவுப்பரிசு, அங்கீகார சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் படைவீரர்களை நினைவுகூரும் ‘வி ஃபார் வெட்டரன்ஸ்’ கீதமும் இசைக்கப்படும்.

Tags: Defense Minister Rajnath SinghJanuary 14 : Armed Forces Veterans Day
ShareTweetSendShare
Previous Post

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

Next Post

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – இருவர் கைது!

Related News

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies