இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார்.
கோலியின் வருகையால் அவரது இடத்தில் பேட் செய்த திலக் வர்மா நீக்கப்படலாம். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என தெரிகிறது.
ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் இப்ராகிம் ஜட்ரன், ரமனுல்லா குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபியும், பந்து வீச்சில் முஜீப் ரகுமான், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல்-ஹக்கும் உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம், இந்தியாவில் இருக்கும் சிறிய மைதானமாக இருப்பதுடன் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக அமைந்துள்ளது. ஸ்பின்னர்களுக்கு பவுலிங் எடுபட்டாலும் ரன்களை கட்டுப்படுத்துவதென்பது கடினமான விஷயமாகவே பவுலர்களுக்கு இருக்கும்.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி 86% வெற்றி பெறும் என்றும் ஆப்கானிஸ்தான் அணி 14 % வெற்றி பெறும் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளது.