அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா வீரர் இரண்டாவது இடம்.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்க்கு முன்னோட்டமாக அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ விளையாடினார்.
இவருடன் ரஷியா அணியின் டாரியா கசட்கினா விளையாடினார். இந்தப் போட்டியில் ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டாரியா கசட்கினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹக்கா மற்றும் இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் விளையாடினர்.
இதில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹக்கா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜாக் டிராப்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணியில் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ எப்டென் இணை 5-7, 7-5, 9-11 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்- இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்புரி இணையிடம் தோற்று 2-வது இடம் பிடித்தது.