அவசரகதியில் தவறான தகவல்களுடன் திமுக அறிக்கை வெளியிட வேண்டாம்! - அண்ணாமலை
Sep 10, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவசரகதியில் தவறான தகவல்களுடன் திமுக அறிக்கை வெளியிட வேண்டாம்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jan 14, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக பாஜக கொண்டிருக்கும் விருப்பம்.

அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் திமுக அரசுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றி கூறியிருந்தோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே @BJP4Tamilnadu கொண்டிருக்கும் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட,…

— K.Annamalai (@annamalai_k) January 14, 2024

எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக திமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சமீப காலமாக, திமுக கட்சியின் பெயரில் வெளிவர வேண்டிய அறிக்கைகள் எல்லாம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பெயரில் வெளிவருவதில் பெரிய ஆச்சரியமில்லை.

இன்னும் சில நாட்களில், திமுக கட்சி உள்விவகாரங்களான, பிரியாணி கடையில் தகராறு செய்த திமுக நிர்வாகி, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் போன்ற தகவல்கள் கூட, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியே மக்களுக்கு அறிவிக்கப்படலாம்.

திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டிற்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான்.

தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா? கேள்விக்கு நேரடி பதில் சொல்ல முடியவில்லை என்றால், பழம்பெருமை பேசுவது திமுகவுக்கு வழக்கம்.

பெரியார் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற 1970 ஆம் ஆண்டு என்பதற்குப் பதிலாக 1920 ஆம் ஆண்டு என்று மற்றொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐபிஎம் 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்து என்று திமுக கூறுகிறதா? பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும்.

அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. 1967 ஆம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது.

இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று திமுக அரசைக் கேட்டுக் கொள்வதோடு, புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, தமிழக பாஜக சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!

Next Post

இது தான் பொங்கல் கொண்டாட நல்ல நேரம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies