பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர, நமது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை, சுவர் விளம்பரங்கள் வாயிலாக முன்னெடுத்தார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர, நமது @BJP4India தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்கள், "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை, சுவர் விளம்பரங்கள் வாயிலாக முன்னெடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, கோவை… pic.twitter.com/1SXHpo6NiH
— K.Annamalai (@annamalai_k) January 16, 2024
அதன் தொடர்ச்சியாக, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, காளப்பட்டி ஒன்றியம், 408வது பூத்திற்கு உட்பட்ட பகுதியில், தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், மற்றும் பூத் நிர்வாகிகள் முன்னிலையில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் ஈடுபட்டோம். தமிழகம் முழுவதும் தமிழக பாஜக
சகோதர சகோதரிகள் சுவர் விளம்பரங்கள் மூலமாக பாராளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குடன் பயணிக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.