அசாம் மாநிலம் தராங் பகுதியில் இன்று காலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை அசாமில் தராங் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தராங் பகுதியில் இன்று காலை 7.54 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில், லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.