லடாக்கின் சான்ஸ்கர் நதிக்கு சதர் மலையேற்றப் பயணத்தைக் கடற்படைத் தளபதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஐ.என்.எஸ் சிவாஜி கப்பலில் இந்தியக் கடற்படையின் சதர் மலையேற்ற (உறைந்த சான்ஸ்கர் நதி, லடாக்) பயணத்தை நேற்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முறைப்படி ஐஸ் கோடரியைக் குழுத் தலைவர் சி.டி.ஆர் நவ்னீத் மாலிக்கிடம் ஒப்படைத்து, அவர்கள் பயணம் வெற்றி பெற கடற்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்தார். 14 பேர் கொண்ட இந்தக் குழு, 11,000 அடி உயரத்தில் உள்ள சிகரத்தில் ஏறி தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னத்தை ஏற்றி வைக்கும்.
இந்தப் பயணம் இந்தியக் கடற்படையின் சாகச உணர்வைப் பிரதிபலிக்கிறது. மேலும் சவால்கள் மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட வலுவான மற்றும் நெகிழ்வான பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.