இந்த வருடத்திறக்கான சிடிஒய் தேர்வில் இந்திய – அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்த மாணவி பிரீஷா சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான உலகில் சிறந்த புத்திசாலி மாணவர் என்ற பட்டதை வென்றார்.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் பார் டேலன்டடு யூத்’ (சிடிஒய்).
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிடிஒய் ஒரு தேர்வை நடத்தி பிரகாசமான மாணவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் மாணவர்கள் பயிலும் வகுப்புக்கும் மேற்பட்ட வகுப்புகளுக்குரிய பாடத்திட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட தேர்வில் மொத்தமாக 90 நாடுகளைச் சேர்ந்த 16,000 மாணவர்கள் போட்டியிட்டனர்.
இதில் 9 வயதேயான மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரீஷா சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான உலகில் சிறந்த புத்திசாலி மாணவர் என்ற பட்டதை வென்றார்.
இவர் ஒரு இந்திய – அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரீஷா கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள வார்ம் ஸ்பிரிங் எலிமெண்டரி பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் இந்த தேர்வில் 99 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.