இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதார்.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதன் கடைசி போட்டி நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்களை இழந்திருந்தது. ரோகித் – ரிங்கு கூட்டணி அணிக்கு பெறும் பலமாக இருந்தது.
இப்போட்டியில் ரோகித் ரோகித் சர்மா 11 பௌண்டரீஸ் 8 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 121 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுமட்டுமின்றி இப்போட்டியில் நடந்த முதல் சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா 2 சிக்சர்களை எடுத்து வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்.
அதேபோல் இரண்டாவது சூப்பர் ஓவரில் 1 சிக்சர் , 1 பௌண்டரியை அடித்து அணிக்கு பெறும் பலமாக இருந்தார். மொத்தமாக இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 11 சிக்சர்களை அடித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் மற்றும் இரண்டுவது போட்டிகளில் டக் அவுட் ஆன ரோகித் சர்மா மூன்றாவது போட்டியில் சதம் அடித்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்து இருந்த கிளென் மேக்ஸ்வெல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை முந்திய ரோஹித் சர்மா தற்போது அதிக சர்வதேச டி20 போட்டி சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
மேலும், ஐபிஎல் உள்ளிட்ட ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இது அவரது ஆறாவது சதம் ஆகும்.