நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!
Sep 28, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தானில் நகைகளை கொள்ளையடிக்க 90 வயது மூதாட்டியை திருடர்கள் கட்டிலோடு தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், வீட்டின் முன்பு காற்று வாங்கியபடி ஆழ்ந்து உறங்கியுள்ளார். அப்போது, அவர் அதிகளவில் நகைகளை அணிந்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பணம் நகை ஏதாவது கிடைக்கிறதா என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவர்களின் கண்ணில் பட்டது. ஆனால், அவர் அணிந்திருந்தது தங்க நகைகள் அல்ல; அனைத்தும் வெள்ளி நகைகள். இருப்பினும், வந்தவரை லாபம் என முடிவெடித்த கொள்ளையர்கள் அவற்றை பறித்து செல்ல முடிவெடுத்தனர்.

நகைகளை கழற்றும்போது மூதாட்டி எழுந்து சத்தம் போட்டுவிட்டால் மாட்டிக்கொள்வோம் என அஞ்சிய அவர்கள், மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்றனர். பின்னர், ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, மூதாட்டியின் நகைகளை பறித்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.

மறுநாள் அந்த வழியாக சென்ற சிலர், கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்ட மக்கள், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து பண்டி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 90-year-old womanthievesOrderRajasthanrobberyrobberskidnapedsteal her jewelry
Share
Tweet
SendShare
Previous Post

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies