அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் சிலர் தங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதாக நினைக்கிறார்கள் என ராகுல்காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேற்காசிய போரின்போது எரிபொருள் விலை உயராமல் விவசாயிகளைப் பாதுகாத்ததாகவும், விவசாயிகளுக்கு கடன் சுமை ஏற்படக் கூடாது என்பதே மத்திய அரசின் முதன்மை இலக்கு எனவும் கூறினார். வளர்ந்த இந்தியா இலக்கை அடைய வேளாண் துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சிலர் தங்கள் பாக்கெட்டில் இருந்து அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை வெளியே எடுக்கிறார்கள் எனவும் அரசியலமைப்பும் ஜனநாயகமும் தங்கள் பாக்கெட்டில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
ஆட்சியில் இல்லாத போதும், ஒருவித விசித்திரமான அதிகார போதையில் அவர்கள் இருப்பதுபோல் தெரிவதாகவும் ராகுல்காந்தி குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
















