முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனுவுக்கு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 400 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார்.
அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், வழக்கில் சரணடைந்துள்ள முத்துகுமார், சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















