எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என கூறினார்.
பாலியல் வன்கொடுமை, மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், மக்களுக்காக புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தீபாவளி சமயத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
















