தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நாளை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
முழுநேர தமிழக ஆளுநராக பதவி ஏற்ற பின்பு கடந்த வாரம் டெல்லி சென்ற ஆளுநர் அர்லேகர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தார்.
அதேவேளையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அந்த நேரம், அமித்ஷா டெல்லியில் இல்லாததால் அவரை சந்திக்க முடியவில்லை.
இந்நிலையில், நாளை டெல்லி செல்லும் ஆளுநர் அர்லேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடர்பான அறிக்கை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து அமித்ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















