சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பேருக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, பிரிட்டானியா, டீரிம் பேக், ஐடிசி, எலைட் நேச்சுரல் ஆகிய நிறுவனங்களிடம் பல்வேறு வகையான கேக்குகள் வாங்கப்பட்டன.
குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை, அரசு விடுமுறை என்பதால் முந்தைய நாள் கேக் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அதன்படி சென்னை, கொளத்துார் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர், மடுமா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் விஜய் கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
















