தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.அருள்முருகன் தீர்ப்பு அளித்தார்.
அதில், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஆணையிட்டார்.
















