சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை - சிறப்பு தொகுப்பு!
Nov 13, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 13, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியாகியுள்ள நிலையில் அதில் முழுமையான வரலாற்றுப் பதிவு செய்யப்படவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஜனநாயக படுகொலை மற்றும் ஊழல் குறித்த தெரிவிக்கப்படவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதற்கு முதலில் ஒப்புக் கொண்டிருந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் சோனியா காந்தியின் சுயசரிதையை தங்கள் நிறுவனம் பிரசுரிக்கவில்லை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

நூலை வெளியிட தாங்கள் ஆர்வமாக இருந்ததாகவும், ஒரு பதிப்பாளராக நூலில் இடம்பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதும், நூலின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியருக்கு பரிந்துரைகளை வழங்குவதும் தங்களது பொறுப்பு என்றும் கூறிய பென்குயின் நிறுவனம் தங்கள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்ட மாற்றங்களை நூலாசிரியர் சோனியா காந்தி ஏற்க மறுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்தாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடும் ஒப்பந்தத்தை இறுதி செய்ததையடுத்து கடந்த நவம்பர் 10ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறு நூல் Belonging: A Journey of Love என்ற பெயரில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

ஒரு சுயசரிதை புத்தகத்தில் உண்மையை எழுதுவதற்குக்கூட அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த நூலில் உண்மைக்கு மாறான செய்திகளே நிறைய உள்ளன என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சோனியா காந்தி தனது சுயசரிதை புத்தகத்தில் பல முக்கியமான வரலாற்று உண்மைகளைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

‘அண்ணா அந்தோலன்’ (Anna Andolan) 2011-ல் நடைபெற்றது. ஆனால் சோனியா அந்தக் காலத்தை 2012 என்று குறிப்பிட்டுள்ளார். 1925-ல் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது என்ற வரலாற்றைத் திரித்து RSS 1921-ல் தொடங்கப்பட்டதாக சோனியா எழுதியுள்ளார். கொரொனா பெருந்தொற்று பரவிய காலத்தில் 2020 நவம்பரில் காலமான அகமது படேல் பற்றி கூறும் போது அவர் 2022-ல் காலமானதாக சோனியா கூறியுள்ளார்.

இத்துடன் இந்திய வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளைச் சோனியா திட்டமிட்டே திரித்து கூறியிருப்பதை இந்நூலில் பல இடங்களில் பார்க்கப்படுகிறது.

1968-பிப்ரவரி மாதத்தில் ராஜீவை மணந்தாலும், 1983 ஏப்ரல் 30ம் தேதி தான் அதாவது 15 ஆண்டுகள் கழித்துத்தான் இந்தியக் குடி உரிமையை சோனியா பெற்றார். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியக் குடியுரிமையைக் கூடப் பெறாமல், பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தில் சோனியா வசித்து வந்தார்.அக்காலத்தில் இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு என்பது ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பதற்கு இதுவே சான்று. இந்திய குடியுரிமை பெறுவதில் என்ன தாமதம்? எதற்கு தாமதம் என்பது பற்றி தனது சுய சரிதையில் சோனியா தெரிவிக்கவில்லை.

மேலும் ராஜீவைத் திருமணம் செய்ததும் தன்னை இந்திய விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லுமாறு ராஜீவ் காந்தியை வற்புறுத்திய சோனியா, திருமணமான மூன்று மாதங்களில் 1968-ஏப்ரலில் இத்தாலி குடியுரிமை கொண்ட நிலையிலும் இஸ்ரோவுக்குச் சென்று சுற்றிப்பார்த்தார். அதன் பிறகு 1970-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இஸ்ரோவின் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாய் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் நீல நிறமாக மாறியிருந்ததுடன், பல இடங்களில் கருப்பு நிறத் தழும்புகளும் காணப்பட்டன. மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டதுடன் உடற்கூராய்வு செய்யப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இந்த உண்மைகளையும் சோனியா தனது புத்தகத்தில் விவரிக்கவில்லை.

அவசர நிலை பிரகடனம் பற்றியும் இந்திரா காந்தியின் சர்வாதிகார நடவடிக்கைகள் பற்றியோ, இந்திராவின் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் மீது நடந்த இனப்படுகொலை பற்றியும் உண்மையைச் சொல்லாத சோனியா தனது சுயசரிதையில் உண்மைக்கு மாறான செய்திகளையே தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாட்டின் தலைநகரிலேயே ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து “ஒரு பெரிய மரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்” என்ற ராஜீவ் காந்தியின் புகழ்பெற்ற கருத்து குறித்து சோனியா தனது சுயசரிதையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் மிக கவனமாக சீக்கியர்கள் கொலைகளில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சோனியா திட்டமிட்டே குறிப்பிட்டுள்ளார்.

போஃபர்ஸ் (Bofors) ஊழல் பற்றி ஒன்றே கால் பக்கங்கள் மட்டுமே எழுதியுள்ள சோனியா, அது ராஜீவை வீழ்த்தத் துடித்தவர்கள் நடத்திய “ஊடக விசாரணை” என்று குறிப்பிட்டுள்ள்ளார். அதிலும் குவாட்ரோச்சியின் பெயரை ஒருமுறை கூட பதிவு செய்யாமல் தவிர்த்துள்ளார்.

சங்கடமான வரலாறு தொடர்ந்து தவிர்க்கப்படுவதும், அசௌகரியமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் விடப்படுவதும், காந்தி குடும்பம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் முடிந்தவரை புகழ்ச்சியான வெளிச்சத்தில் முன்வைக்கப்படுவதையும்தான் இந்தச் சுயசரிதையில் சோனியா வெளிபடுத்தியுள்ளார் என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags: Sonia Gandhi’s autobiographyassault on democracyPenguin Random HouseCongress leader Sonia GandhiHarperCollins'Belonging: A Journey of LoveSonia Gandh
Share
Tweet
SendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

Next Post

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies