இஸ்ரேல் முன்னாள் ராணுவத் தளபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) அடுத்த பிரதமராவதற்கான முதல் கட்ட முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்து முடிந்த இஸ்ரேல் தேர்தலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான கட்சி 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளையில், முன்னாள் ராணுவத்தளபதி ஐசென்கோட்டின் தலைமையிலான கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இஸ்ரேலின் இரண்டு அரபு கட்சிகளான ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) மற்றும் ‘ராம்’ (Ra’am) ஆகிய கட்சிகள் மொத்தமாக 19 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.
நெதன்யாகுவின் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், நாடாளுமன்றத்தில் 67 இடங்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஐசென்கோட்டுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் நெதன்யாகுவிற்கு 46 இடங்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
எந்தக் கட்சிக்கும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும்பாலான காலம் இஸ்ரேல் பிரதமராக இருந்து வழிநடத்திய பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்பாராத பெரிய சவாலாக இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான ஐசென்கோட் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களில் இன்னும் 13 இடங்கள் குறைவாகவே கூட்டணியில் உள்ளன.
நெதன்யாகுவின் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், நாடாளுமன்றத்தில் 67 பிரதிநிதிகள் ஐசென்கோட்டுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் நெதன்யாகுவிற்கு 46 இடங்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக், புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார். தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை உள்ளடக்கிய “தேசிய அவசரக்கால அரசை அமைக்கும் முயற்சியில், ஐசென்கோட்டிற்கு முழு சுதந்திரம் அளிக்க அதிபர் ஹெர்சாக் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தேவையான வாக்குகளைச் சேகரிக்கும் போட்டி தொடங்கியுள்ள நிலையில் அதற்காக ஐசென்கோட்டிற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் ஐசென்கோட் அரசை அமைத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிக்க முடியாவிட்டால், கூடுதல் அவகாசம் வழங்கினால் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதிபர் ஹெர்சாக் கருதினால், மேலும் 14 நாட்களை வழங்கலாம். அவ்வாறு நடந்தால், புதிய அரசை அமைக்க ஐசென்கோட்டிற்கு வரும் டிசம்பர் 20 ம் தேதி வரை அவகாசம் கிடைக்கலாம்.
அதிலும் ஐசென்கோட் அரசு அமைக்க முடியாது போனால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து ஒரு ‘தேசிய ஒற்றுமை அரசை அமைக்குமாறு அதிபர் அழைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக ஐசென்கோட்டுடன் இணைந்து ஒரு ஒற்றுமை அரசை அமைக்கவும், அதில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ளவும் நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்தை ஐசென்கோட் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற ஐசென்கோட்டுக்கு தலா 11 மற்றும் 8 இடங்களைப் பெற்ற ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) மற்றும் ‘ராம்’ (Ra’am) ஆகிய அரபு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 7 இடங்களைப் பெற்றுள்ள Yisrael Beytenu கட்சியின் தலைவர் அவிக்தோர் லிபர்மேன், ஐசென்கோட்டின் கூட்டணியில் இருந்தாலும் அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை நிராகரித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் தீவிர மதப்பற்றுள்ள வலதுசாரி கட்சிகளான ‘ஷாஸ்’ (Shas) மற்றும் ‘யுனைடெட் தோரா ஜூடாயிசம்’ ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபர்மேன் முன்மொழிந்துள்ளார்.
புதிய அரசை அதிகாரப்பூர்வமாக அமைப்பதற்குத் தேவையான நம்பிக்கைத் வாக்கெடுப்பில் வெற்றி பெற, ஐசென்கோட்டும் அவரது கூட்டாளிகளும் இஸ்ரேலின் அரசியல் கட்சிகளிடையே போதுமான ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் உள்ளன.
ஐசன்கோட், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முழு பதவி காலமும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு அரசை அமைக்கும் அதே வேளையில், ஒன்றுக்கொன்று முரண்படும் அரசியல் கோரிக்கைகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார் என்பதே உண்மை.
















