செங்கல்பட்டு மாவட்டத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வேல் பூஜை மற்றும் வேல் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நென்மேலி அருகே சாந்தி நகரில் உள்ள பிள்ளையார் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வேல் பூஜை மற்றும் வேல் யாத்திரைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிள்ளையார் கோயிலில் வேல் பூஜை செய்துவிட்டு, நென்மேலி முருகன் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்த நிர்வாகிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்து காவல் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
அப்போது, விஎச்பி மாநில தர்ம பிரசார அமைப்பாளர் சுவெ. ராமன் ஜி என்பவரை போலீசார் கீழே தள்ளி அவமரியாதை செய்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்து அமைப்புகளை ஒன்றிணைத்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
















