புதுதில்லியில் 2024, ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட நாடுமுழுவதிலும் இருந்து 12,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 23 பேர் பங்கேற்கிறார்கள்.
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் 2024, ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பு சிறப்புடன் நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சுமார் 12,000 சிறப்பு விருந்தினர்கள் மத்திய அரசால் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 சிறப்பு விருந்தினர்களும் அடங்குவர்.
மக்கள் பங்கேற்பு என்ற சிறப்பு முன்முயற்சியின் ஒரு பகுதியாக குடியரசுதினக் கொண்டாட்டங்களை தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த சாமானிய மக்களும் பார்வையிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஊரக தூய்மை இயக்கம் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் சிறப்பு விருந்தினர்களாக இருப்பார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் சுவாமி, குடியரசுதின அணிவகுப்பைப் பார்வையிடும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.