16-வது நிதிக் குழுவிற்கான பணியிடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் 280-வது பிரிவின் கீழ், 2023 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 16-வது நிதிக் குழுவிற்கு இணைச் செயலாளர் நிலையில் மூன்று பணியிடங்களை அதாவது, இரண்டு இணைச் செயலாளர் பணியிடம், ஒரு பொருளாதார ஆலோசகர் பணியிடம் ஆகியவற்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் நிதிக்குழுவின் பணிகளை மேற்கொள்ள உதவி புரிய வேண்டும். குழுவின் மற்ற அனைத்துப் பணியிடங்களும் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.