ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா பங்குபெற்றார்.
ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் உடன் இணைத்து இந்திய வீரர் ரோகன் போபண்ணா போட்டியில் பங்குபெற்றார். இருவரும் ஒரு அணியாக இருந்தனர்.
இன்று நடைபெற்ற போட்டியில் இவர்களுடன் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களான டக்வொர்த், பால்மன்ஸ் இணை விளையாடியது.
இந்த போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை 7-6 (7-5), 4-6, 7-6 (10-2) என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களான டக்வொர்த், பால்மன்ஸ் இணையைத் தோற்கடித்தது.
இந்த மூலம் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.