அன்னபூரணி திரைப்பட விவகாரம்! - மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா!
Jul 24, 2025, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்னபூரணி திரைப்பட விவகாரம்! – மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஜெய் ஸ்ரீ ராம்’: “அன்னபூரணி” படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அன்னப்பூரணி.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் சில வசனங்கள் இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என்று சில ஆர்வலர்கள் படத்தின் மீதும், நடிகை நயன்தாரா மீதும் புகார் அளித்தனர். இதனையடுத்து Netflix தளத்தில் வெளியான அன்னப்பூரணி படமும் அதிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஜெய் ஸ்ரீ ராம் என்று தொடங்கும் அறிக்யைில்,

எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அன்புடன், நயன்தாரா!

Tags: Nayanthara apologisesnayantharaannapoorani film
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில்: நிலப்பிரச்சனை முதல் திறப்பு விழா வரை ஒரு சிறப்புப் பார்வை!

Next Post

இன்று காலிங்கராயர் தினம்!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies