19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா தனது மோசமான பேட்டிங்கால் 40வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடக்க நாளான இன்று மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக குஷ் பாலாலா 22 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கடுத்து அதிகபட்சமாக பார்த் படேல் 13 ரன்களை எடுத்துள்ளார். அமோக் ரெட்டி 11 ரன்களை எடுத்துள்ளார்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஒரு இலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர். இந்த மோசமான பேட்டிங்கால் அமெரிக்கா 40வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
அயர்லாந்தில் அதிகபட்சமாக ரூபன் வில்சன், ஆலிவர் ரிலே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜான் மெக்னலி 2விக்கெட்களை வீழ்த்தினார்.
கார்சன் மெக்கல்லோ, ஸ்காட் மேக்பெத் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் அயர்லாந்து 106 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.