19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிய 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடக்க நாளான இன்று மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சென்வெஸ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிய 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக திவான் மரைஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் 47 ரன்களும், டேவிட் டீகர் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க தொடக்க வீரராக களமிறங்கிய லுவான் 6 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிய 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது. மேற்கிந்திய அணியில் அதிகபட்சமாக நாதன் சீலி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
நாதன் எட்வர்ட் மற்றும் தேஷான் ஜேம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் மேற்கிந்திய அணிக்கு வெற்றி பெற 286 ரன்கள் இலக்காக உள்ளது.