இராமர் கோவில் குறித்து விமர்சனம்: கட்சியை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா!
Oct 16, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் குறித்து விமர்சனம்: கட்சியை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், கட்சியின் இந்த அணுகுமுறை பிடிக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகின்றன.

இவ்விழாவில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

ஆனால், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதோடு, இராமர் கோவில் குறித்தும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்தது மற்றும் இராமர் கோவில் விவகாரம் குறித்து விமர்சிப்பது உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுடா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மகேஷானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான சவுடா, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் வழங்கி இருக்கிறார். இதனிடையே, சவுடா விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags: ResignCongress MLA5GujratAyodya Issue
Share
Tweet
SendShare
Previous Post

பிஸ்கட்டுகளால் வடிவமைக்கப்பட்ட ராமர் கோயில்!

Next Post

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Related News

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies