அயோத்தி இராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி, பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில் வருகிற 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இராமர் கோவில் பிராண பிரதிஷ்டை தினத்தன்று, மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், மாநில அரசுகளும் விடுமுறை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ஆம் தேதி பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 வரை செயல்படும் என்று தேசிய பங்குச் சந்தை கூறியுள்ளது.