ஸ்ரீஹனுமான் திருக்கோயிலில் தூய்மைப் பணியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேற்கொண்டார்.
அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ஶ்ரீராமரின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், ஸ்ரீஹனுமான் திருக்கோயிலில் தூய்மை பணியினை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கொண்டார். பின்னர் அவர் திருக்கோயில் வழிபாடு செய்தார்.