அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அன்று இலவசமாக பிரசவம் பார்க்கப்படும் குஜராத் மருத்துவமனை அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடும் வகையில், கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு ஜனவரி 22ம் தேதி இலவச பிரசவம் செய்ய உள்ளதாக சூரத் டயமண்ட் மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனையொட்டி மருத்துவமனை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
எங்கள் பக்தியின் அடையாளமாகவும், தேசத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்கும் வகையிலும், சாதாரண மற்றும் சிசேரியன் உட்பட அனைத்து பிரசவங்களும் இலவசமாக செய்யப்படும் என மருத்துவமனையின் தலைவர் சிபி வனனி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் 350-400 பிரசவங்கள் செய்யப்படுவதாகவும், சாதாரண பிரசவத்திற்க ரூ. 1800, சிசேரியனுக்கு ரூ.5000 வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கு பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ₹1 லட்சத்திற்காக பத்திரம் வழங்கப்படுவதாகவும், இன்றுவரை, 2000 பெண் குழந்தைகளுக்கு ₹20 கோடிக்கு மேல் பரிசாக வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.